வர்த்தக அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது கோரிக்கை

HTB1ceewKVXXXXXpaXXXq6xXFXXXM 2
HTB1ceewKVXXXXXpaXXXq6xXFXXXM 2

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினரால் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது .

குறித்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் வர்த்தக அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முட்டை விலை அதிகரித்துள்ளமையினால் அதனை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதே நேரம் குறித்த கோரிக்கையினை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னரே அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .