28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட உள்ளது- மாவட்ட அரசாங்க அதிபர்

20200908 151304 2
20200908 151304 2

யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  க .மகேசன் தெரிவித்தார்

20200908 155614
20200908 155614

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட உள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட உள்ளது – க .மகேசன்

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Dienstag, 8. September 2020

டெங்கு நோய் என்பது கட்டுப்படுத்தக்கூடிய அதே நேரம் ஒரு ஆபத்தான விடயம் ஆகவே இந்த மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக நாங்கள் முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே  இன்றைய தினம் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கின்றோம்.

20200908 151705
20200908 151705

 அனைத்து தரப்பினரையும் அழைத்து இந்த கூட்டத்தினை நடாத்தி இருக்கின்றோம் இந்த டெங்கு நோயை  எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில்  இன்று ஆராய்ந்திருக்கின்றோம் உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் அதிகமாக காணப்படுகின்றது டெங்கு ஒழிப்பு தொடர்பில் அதிகளவில் சேவையாற்ற கூடியவர்கள் இந்த உள்ளூராட்சி சபையினர்அத்தோடுஅவர்களுக்கு பொறுப்பும் இருக்கின்றது

20200908 160508
20200908 160508


  அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அதாவது  கழிவுகளை அகற்றுவது பெரிய பிரச்சனையாக காணப்படுகின்றது படித்தவர்களிலிருந்து பாமர மக்கள் வரை கழிவகற்றல் விடயத்தில் சிக்கலான நிலை காணப்படுகின்றதை  வீதிகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது அதாவது வெறும் காணிகளில் குப்பைகளை கொட்டி வருகின்றார்கள் இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளுராட்சி சபை சட்டத்தின் படி  பராமரிக்காத காணிகளை சுவீகரிக்க முடியும் பாவணையில்லாத காணிகளுக்கு விளம்பர பதாகைகளை போடுங்கள் அப்போது உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் காணியினை துப்பரவுசெய்வார்கள்  உள்ளூராட்சி சபையினர் வெற்று காணிகள் தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்
 இந்த வருடம்  கொரோணா காரணமாக உள்ளூராட்சி மன்றங்கள் பலவிதமான வரி இழப்பினை சந்தித்திருக்கிறார்கள் பொது மக்களுக்கு நாங்கள் சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்தி சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தான் இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும் 
எனினும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் உள்ளூராட்சி மன்றத்தினர்அனைவரும் இதனை ஒரு சமூகப் பொறுப்பாக நினைத்து டெங்கினைகட்டுப்படுத்த முன்வர வேண்டும்

20200908 151256
20200908 151256

 டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் நாம் இன்றுவரை திறமையாகச் செயற்பட்டு வருகின்றோம் எனினும் இனிவரும் காலத்திலும் அவ்வாறு செயற்படுவதன் மூலம் தான் இதனைகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் 
ஏனெனில் எமக்கு இன்னும் சிவப்பு எச்சரிக்கை வரவில்லை   கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் கிராம மட்டங்களில் சுகாதாரக் குழு கூட்டங்களை அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் அதேபோல் சுற்றாடல் போலீஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்உதவியுடன் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை  ஏற்படுத்த முடியும் 

எனவே இந்த டெங்கு நிலைமையினை கருத்தில் கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக முன்னேற்பாடான விடயமாக யாழ் மாவட்டத்தில்  இந்த மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு விழிப்புணர்வு வாரமாக அறிவிக்கவுள்ளோம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய இடங்களை அவதானித்து கழிவுகளை அகற்றி இந்த வாரத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டம்இடம்பெற்றது
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட  அரசாங்க அதிபர்  தலைமையில் . வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரன் வடக்குமாகாண சமுதாய வைத்திய நிபுணர் சமுதாய வைத்தியநிபுணர் வடமாகாணம்வைத்தியர் சிவகணேஷ் பிராந்திய தொற்று நோயிலலாளர் வைத்தியர் மோகன் உள்ளாராட்சி  மன்ற தவிசாளர்கள்,செயலாளர்கள்.
சுகாதார  வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள் போலீசார்,இராணுவத்தினரின் பங்குபற்றுதலோடு கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .