புத்தளத்தில் போதைப்பொருட்கள் மீட்பு

0000
0000

புத்தளம் புழுதிவயல் பகுதியிலுள்ள உப்புத் தொழிற்சாலை ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் புத்தளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது .

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய உப்புத் தொழிற்சாலை ஒன்றில் தேடுதல் நடவடிக்கையின் போதே அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் 36 கிராம் ஐஸ் போதைப் பொருள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இதன்போது சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் சொகுசு கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சொகுசு காரொன்றில் 3 கிலோகிராம் கேரளா கஞ்சா திருகோணமலை நிலாவெளி பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டதாக பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவித்துள்ளனர் .

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 140 இலட்சம் ரூபா எனவும் ஐஸ் போதைப்பொருள் சுமார் 3 இலட்சம் பெறுமதி எனவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .