விஷேட தேவைக்குட்பட்ட குடும்பத்திற்கு சமுர்த்தி முத்திரை மறுப்பு

9102018blobid1539099867019
9102018blobid1539099867019

வவுனியா சாந்தசோலையில் வசித்து வரும் விஷேட தேவைக்குட்பட்ட இரண்டு பிள்ளைகளை உள்ளடக்கிய குடும்பத்திற்கு சமுர்த்தி முத்திரை வழங்கப்படவில்லை . இதேவேளை இவர்களை விட வசதி வாய்ப்புக்களுடன் வசிக்கும் குடும்பங்களுக்கு சமுர்த்தி முத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து அப்பகுதி சமர்த்தி அலுவலகரிடம் விஷேட தேவைக்குட்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் சென்று சமுர்த்தி முத்திரை வழங்குவது விடுக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக சாந்தசோலை மகளிர் அமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கும்போது ,

வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கும் மாத வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் வாழ்வாதார உதவிகளாக வழங்கப்படும் சமுர்த்தி முத்திரைகள் வவுனியா சாந்தசேலை சமுர்த்தி உத்தியோகத்தருடன் இணைந்து சமுர்த்தி செயலணியினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், வசதியானவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனரே தவிர வசதியற்ற அன்றாடம் கூலி வேலை செய்யும் வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு சமுர்த்தி முத்திரை மறுக்கப்பட்டுள்ளது .

வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பங்களுக்கு முத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் இவ்வாறு வசதியற்றவர்களுக்கும், விஷேட தேவைக்குட்பட்ட வாய்பேச முடியாத கணவன் மனைவியுடன் வசிக்கும் இரண்டு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்திற்கு எவ்விதமான சமுர்த்தி உதவிகளும் கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக வழங்கப்படவில்லை . அவர்களுக்கு சமுர்த்தி முத்திரைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .