தற்காலிக அடையாள அட்டை விண்ணப்பங்கள் 09 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான, விண்ணப்பங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தற்காலிக அடையாள அட்டைகளை பொற்றுக்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்டத்தில் வேலை செய்பவராயின் தோட்ட அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளப்படும் இதற்கான உறுதிச் சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலகத்திடம் ஒப்படைத்து வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் போது குறித்த இந்த தற்காலிக அடையாள அட்டை, வாக்காளர் வாக்களித்த பின்னர் வாக்களிப்பு மத்திய நிலையத்தின் அதிகாரியினால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என மேலதிக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.