39 சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

104682005 gettyimages 891326652
104682005 gettyimages 891326652

பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளை தடுத்து வைத்துள்ள பூசா சிறைச்சாலையில் கைதிகள் பலர்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  நேற்று அதிகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள 45 கைதிகளில் 39 கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாதுகாப்பு நடைமுறைகளை இலகுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

 கொரோனா காலத்தில் உறவினர்களை பார்க்க முடியாமை காணமாக வழ்னக்கப்பட்ட உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாட சந்தர்ப்பமளிக்கப்படாமை, கைதிகளைப் பார்வையிட வரும் சட்டத்தரணிகளை  சோதனைக்குட்படுத்துதல், சிறைச்சாலை வளாகத்தில் சோதனை மேற்கொள்ளல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

 இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தும் 39 கைதிகளில்,  கொஸ்கொட தாரக,  பொடி லெசி, கஞ்சிபானை இம்ரான் மற்றும் வெலே சுதா போன்ற திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அடங்குவதாகவும்,  உண்ணாவிரத்தப் போராட்டை பகிஷ்கரித்துள்ள 6 கைதிகளில்  பொட்ட நெளபர், கெவ்மா, ஆமி சம்பத் உள்ளிட்டோர் உள்ளடங்குவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.