நவீன தொழில்நுட்ப பொருளாதாரத்தினூடாக மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படும்

kotabaya 0
kotabaya 0

நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமையையின் ஊடாக நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹிங்குராங்கொட பகுதியில் நேற்று (Oct.27) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

´உறுதியான நோக்கம் – வேலை செய்யும் நாடு´ என்ற தொனிப் பொருளில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இந்த பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ஷ

தற்போது ஆசிய நாடுகள் துரித வளர்சி கண்டு வருவதாகவும் நவீன தொழில்நுட்பங்களையும், பௌதிக வளங்களையும் பயன்படுத்தியே அந்த நாடுகள் அபிவிருத்தியடைந்து வருவதாக தெரிவித்த அவர், இலங்கைக்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆங்கில மொழியறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றின் ஊடாக அந்த இலக்கை அடைவது சாத்தியமாகும் எனவும் அதற்கு தெளிவான இலக்கு ஒன்று அவசியம் எனவும் அது தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.