வடமாகாண அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் பிறப்பித்த உத்தரவு!

20200915 110610
20200915 110610

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது குறித்த கூட்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் கலந்துகொண்ட குறித்த கூட்டத்தின்போது விவசாயிகளால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

20200915 110619
20200915 110619

அதற்கமைய வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்று விவசாய பொருட்களை விற்பனை செய்யும் போது சந்தைகளில் 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை நிறுத்தக்கோரிக்கை விடப்பட்டது.

20200915 110555
20200915 110555

உடனடியாக அந்த கழிவு பணம்பெறும் நடவடிக்கையினை இடை நிறுத்துமாறு வடக்கு ஆளுநர் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளரை பணித்ததோடு அவ்வாறு நிறுத்த தவறினால் போலீசார் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்

வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் விடுத்த உத்தரவு!

யாழ் மாவட்ட சந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்தவேண்டும் – விவசாய அமைச்சர்

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Dienstag, 15. September 2020

அத்தோடு இலங்கை பூராகவும் உள்ள கமநல சேவை அமைப்புகளுக்கான களஞ்சியம் அடுத்த வருட பாதீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி தரப்படும் எனவும் அத்தோடு வடக்கில் கமநல சேவைகள் திணைக்களத்தின் குரிய தலைமை காரியாலயம் கட்டிடத்திற்கு அடுத்த பட்ஜெட் மூலம் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் எனினும் மிக விரைவில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து புதிய கட்டட வேலைத்திட்டத்தினை உடனடியாகஆரம்பிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

குறித்த கூட்டத்தின் போது விவசாய அமைப்பு பிரதிநிதிகளால் கட்டாக்காலி மாடுகள், இவள் கட்டாக்காலி நாய்கள் குரங்கு மற்றும் பன்றி களின் தொல்லை தொடர்பான பிரச்சனை அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது இதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பாக யானை பாதிப்பு தொடர்பில் பொதுவான பிரச்சினை காணப்படுகின்றது எனினும் இந்த முறை எமது அரசாங்கம் அதற்கு தனியான ஒரு அமைச்சினை உருவாக்கி உள்ளது அதே போல காட்டு விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுகின்றது அதற்கு ஓரிரு மாதங்களில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

20200915 110614
20200915 110614

அத்தோடு வடக்கில் நெல் களஞ்சியம் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது அதற்கு உடனடியாக யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள உணவு களஞ்சியத்தை உடனடியாக நெல் களஞ்சியத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சர் உடனடியாக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டதோடு அத்தோடு விவசாயிகள் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்ட தோடு அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைச்சினால் உரிய தீர்வுகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

20200915 110617
20200915 110617

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர், இன்றையதினம் வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே அமைச்சர் தலைமையில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் சால்ஸ்,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்‌ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா,
நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.