வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

policelinedonotcross
policelinedonotcross

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், நானு ஓயா – வெண்டிகோனர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில், இளைஞர் ஒருவர் பலியானார்.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுடன், எதிர்த்திசையில் பயணித்த உந்துருளி மோதியதில், பிற்பகல் 12.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், நோர்வுட் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே பலியானதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.