வடக்கில் நியமனம் கிடைக்காத பட்டதாரிகள் மேன்முறையீடு – மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

download 1 4
download 1 4

பட்டதாரிகள் நியமனத்தின்போது நியமனம் கிடைக்காது வடக்கு மாகாணத்திலிருந்து மட்டும் 605 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்றனர்.

அண்மையில் நாடு பூராகவும் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தில் வடக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 902 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட நியமனதாரிகளில் 261 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை எனவும் கண்டுகொள்ளப்பட்டது.

இந்தப் பட்டதாரி நியமனத்தின்போது நியமனம் கிடைக்காத பட்டதாரிகள் மேன்முறையீடு செய்வதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 320 பட்டதாரிகளும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 56 பேரும், வவுனியா மாவட்டத்திலிருந்து 122 பட்டதாரிகளும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 57 பட்டதாரிகளும், மன்னார் மாவட்டத்திலிருந்து 70 பட்டதாரிகளும் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து மொத்தமாக 605 பட்டதாரிகள் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.