அரசுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கக்கூடும் -ஹாபீஸ் நஸீர் அஹமட்

unnamed 1 4
unnamed 1 4

பொருத்தமான சூழ்நிலைகளின்போது அரசுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கக்கூடும் என்றுகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்டமைப்பின் வெற்றிக்காக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசு கோருவது வழமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசு பெருமளவு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. மக்களின் நன்மைக்காக நாங்கள் இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்”எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .