ரணில் உட்பட்டோர் ஆணைக்குழுவில் இருந்து வௌியேறினர்!

1 25
1 25

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய இன்று 10 மணியவில் அவர்கள் அங்கு முன்னிலையாகினர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்கி வருகின்றனர்.

திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க முன்வைத்த முறைப்பாடு தொடர்பில்
வாக்குமூலம் வழங்கவே அவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னிலையாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.