புத்தகக் கண்காட்சியில் சுகாதார முறைகளை மீறுவோர் வெளியேற்றப்படுவார்கள்

19541332125232bb4420b00ac2f42d98 XL 2
19541332125232bb4420b00ac2f42d98 XL 2

நேற்றைய தினம் ஆரம்பமான கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் சுகாதார வழிகாட்டல்கள் கடுமையாகப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் டொக்டர் றுவான் விஜயமுனி தெரிவிக்கையில்,

சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்கத் தவறுவோர் கண்காட்சி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் .

சுகாதார வழிகாட்டல் தொடர்பான நிபந்தனையின் கீழ் புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு அங்கீகாரம் அளித்துள்ளது.

ஒரு மண்டபத்தில் ஒரே நேரத்தில் 300 பேருக்கு மாத்திரமே ஆகக்கூடுதலாக இருக்க முடியும். சமூக இடைவெளி பேணுவதும் முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.