அண்மைய நில அதிர்வுகளுக்கும் கட்டிடம் இடிந்ததற்கும் எவ்வித தொடர்புமில்லை – மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க

3 4
3 4

கண்டி மாவட்டத்தில் அண்மையில் உணரப்பட்ட நில அதிர்வுகளுக்கும் இன்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.ரணசிங்க தெரிவித்துள்ளார் .

கண்டியில் குண்டசாலை , பன்வில மற்றும் வத்தேகம ஆகிய பகுதிகளில் இம்மாதம் 13 ஆம் திகதியும் அதற்கு முன்னரும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வின் தாக்கம் காரணமாகவா இன்று குறித்த கட்டிடம் தாழிறங்கியதா என்று வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இடிந்து விழுந்த கட்டிடம் அமைந்துள்ள பிரதேசத்திற்கும் சில அதிர்வுகள் உணரப்பட்ட பிரதேசத்திற்கும் பாரியளவு தூர இடைவெளி காணப்படுகிறது.

எனவே நில அதிர்விற்கும் கட்டட அனர்தத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தாழிறங்கியதன் காரணமாகவே கட்டடம் இடிந்து விழுந்தது. இதற்கான ஏனைய காரணிகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துச மத்திய நிலையம் ஆராயும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .