சிறப்பான ஒத்துழைப்புக்கள் கிடைத்த காரணத்தாலேயே பணியாற்ற முடிந்தது- தம்மிக்க பிரியந்த

20200921170711 IMG 1286
20200921170711 IMG 1286

சிறப்பான ஒத்துழைப்புக்கள் கிடைத்த காரணத்தாலேயே பணியாற்ற முடிந்தது என வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எனது பிரதேசம் கொழும்பிலிருந்தாலும் இவ்வாறு விரைவாக செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை எமது கடமையின் அமைப்பின்படி இடமாற்றம் என்பது எந்நேரத்திலும் எமக்கு வரலாம் ஒழுக்கமுள்ள உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் நாங்கள் அதற்கு கௌரவமளித்து இடமாற்றத்தை பெற்று அந்தப்பிரதேசங்களுக்கு செல்லவேண்டி நிலை ஏற்பட்டுள்ளது . உங்களில் சிலர் என்னை இங்கு தொடர்ந்து கடமையாற்றுவதற்கு முயற்சித்தார்கள் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது .

எனக்குக்கிடைக்கின்ற உத்தரவுகளை நான் ஒருபோதும் மாற்ற நினைப்பதில்லை . எனக்குக்கிடைக்கின்ற உத்தரவுகளை செயற்படுத்துவது தான் எனது நோக்கம் உங்களுடைய அக்கறைக்கு எனது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் நாங்கள் ஒரே நாட்டின் மக்கள் நாங்கள் தனிப்பட்ட ரீதியில் இன மதங்களைக் கொண்டாலும் நாங்கள் அனைவரும் இந்நாட்டின் மக்கள் எனது காலத்தின் நான் அனைவரையும் ஒரே ரீதியாகத் தான் எண்ணினேன் உங்களிடமிருந்து எனது கடமைக்காலத்தில் கிடைத்த ஒத்துழைப்பு மிகவும் சிறப்பானது.

எமது பொலிஸ் பிரிவில் சமுதாயப்பிரிவு ஒன்று செயற்படுகின்றது. சமுதாய பொலிஸ் முறைமை என்று சொல்லப்படுகின்ற முறைமையுைம் நான் விளங்கிக்கொண்டிருக்கின்ற முறைமையும் சேர்த்துத்தான் நான் செயற்படுத்துகின்றேன் . பிரதேசத்தில் பொலிசார் எவ்வாறு செயற்படவேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கும் சிறந்த பொலிஸ் சேவை ஒன்றினை வழங்கும் போது பொதுமக்களுடைய தேவை என்ன என்பது அடையாளப்படுத்த வேண்டும். இங்கு பல்வேறு தரப்பினரையும் இணைத்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு அக்கலந்துரையாடலில் கற்றுக் கொண்ட அறிவை வைத்துக்கொண்டு இப்பிரதேசத்தில் இலகுவாக கடமையாற்றக்கூடியதாக இருந்தது . என்று மேலும் தெரிவித்துள்ளார் .

இன்றைய பிரியாவிடை நிகழ்வில் பொது அமைப்பினர்கள் , வர்த்தகர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் .