கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் அடையாளம்

corona 2
corona 2

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,298ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 174 ஆக குறைவடைந்துள்ளது.