அரசாங்கத்தின் 20 ஆவது திருத்தம் தேசத்துரோகம்- சஜித்

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 5

ஜனநாயகத்தை பாதுகாக்கும்வகையிலான திருத்தங்களை கொண்டுவருவதற்குஅரசாங்கம் முயற்சி செய்தால் அதற்க்கு நாங்கள் ஆதரவளிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் கெளரவத்தை சீரழிக்கும்வகையிலே 20 ஆவது திருத்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 19 ஆவது திருத்தத்தில் இருக்கும் ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதிப்படுத்தும் விடயங்கள் அனைத்தும் இதன்மூலம் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ஜனநாயக ஆட்சி ஒன்றின் கெளரவத்தை பாதுகாக்கும்வகையிலே 19ஐ கொண்டுவந்தோம். இதில் குறைபாடுகள் இருக்கின்றதை ஏற்றுக்கொள்கின்றோம். அதனை திருத்திக்கொண்டு மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்காக தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி, அரசியலமைப்பு திருத்தம் மூலம் தேசிய பாதுகாப்பு பேரவை ஒன்றை ஏற்படுத்தவேண்டும். 19இல் இருக்கும் அதிகமானவை ஜனநாயகத்தை பாதுகாக்கும் விடயங்களாகும். அதனை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.

ஆனால் இன்று இடம்பெறுவது அதிகார போராட்டமாகும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரம் இருக்கவேண்டும். அந்த அதிகாரம் விரிவுபடுத்தப்படவேண்டும். பொம்மை ஜனாதிபதியோ காரியாலய உதவியாளர் போன்ற பிரதமரோ எமக்கு தேவையில்லை.

20 ஆவது திருத்தம் மூலம் 19 இல் இருக்கும் அனைத்து ஜனநாயக விடயங்களும் இல்லாமல் போகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் 2 0ஐ நாங்கள் எதிர்க்கின்றோம்.

அத்துடன் 20தொடர்பாக ஆராய பிரதமரினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை எங்கே என கேட்கின்றோம். அதனை பாராளுமன்றத்துக்கு ஏன் சமர்ப்பிக்கவில்லை. அந்த திருந்தங்களைக்கூட ஏற்றுக்கொள்ளாமலே 20ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அத்துடன் 20 ஆவது திருத்தம் தேசத்துரோகம். அரசாங்கம் அதனை வாபஸ்பெற்றுக்கொண்டு அனைவருடனும் கலந்துரையாடி நல்ல முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .