சர்வதேச சைகை மொழி தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

IMG cefc440126fc1935d9235b3c854538d4 V
IMG cefc440126fc1935d9235b3c854538d4 V

செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி சர்வதேச சைகை மொழி தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி செப்டம்பர் 21 திகதி தொடக்கம் 27 திகதிவரை சைகை மொழி வாரமாக பிரகடனம் செய்து பல விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நாடு பூராவும் இடம்பெற்று வருகின்றன. 

அந்தவகையில் இன்று (24) வவுனியா மாவட்ட சைகை மொழி தினம் வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் விழிப்புணர்வு செயலமர்வாக நடைபெற்றது. மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்தலைவர் நிசாந்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அகில இலங்கை செவிப்புலனற்றோர் சங்கத்தலைவர் கனநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். செல்வி டிலானி வளவாளராக கலந்து சைகை மொழிபெயர்ப்பில் உதவினார்.

IMG 77eaca7a7afd7a5f50a87b6ce7f73916 V

நிகழ்வில் கேட்பதில் பேசுவதில் சிரமமுள்ளவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் உள்ளடங்கலாக அடங்கிய மகஜர் ஒன்றும் வவுனியா அரச அதிபர் சமன் பந்துல சேனவிடம் கையளிக்கப்பட்டது. வருகின்ற. ஒக்டோபர் 27 சகல தரப்பினரையும் அழைத்து இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்ஒன்றுக்கு  அரச அதிபர் உடன் ஏற்பாடு செய்துள்ளார்.

IMG 15e990f145133fe5d1718251b9a8c49d V
IMG bf8681a8e5f82441bcdf9b58c15f4526 V
IMG bf8681a8e5f82441bcdf9b58c15f4526 V
IMG 00b0f9072dd76c1eb067f7566d757149 V
IMG 00b0f9072dd76c1eb067f7566d757149 V
IMG 77eaca7a7afd7a5f50a87b6ce7f73916 V