மட்டக்களப்பில் தபால் மூல வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

postel vot 1
postel vot 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரசாங்க சேவை பணியாளர்கள் தத்தமது திணைக்கள அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சகல வசதிகளும் திருப்திகரமாக செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த தபால் மூல வாக்களிப்பில் இம் மாவட்டத்தில் 11522 பேர் தகுதி பெற்றிருப்பதாகவும் அரசாங்க திணைக்கள பணியார்கள் இன்றும் நாளையும் வாக்களிப்பில் ஈடுபடுவதுடன் அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க தவறுவோருக்கு எதிர்வரும் ஏழாம் திகதி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்களிக்க முடியு மென்றும் அரசாங்க பொலிஸ் மற்றும் படையினர் எதிர்வரும் நான்காம் திகதியும் ஐந்தாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க விருப்பதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

இதேவேளை இம் மாவட்டத்தில் மட்டக்களப்பு தொகுதியில் 1,87,682பேரும் பட்டிருப்பு தொகுதியில் 94645 பேரும் கல்குடா தொகுதியில் 1,15,974 பேருமாக இத் தேர்தலில் 3,98,301 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் கடமைக்கு 4991 அரச பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் மேலும் தமது தகவலில் தெரிவித்தார்.