டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரிப்பு

Dengue
Dengue

மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் 8000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.