ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள நடவடிக்கை!

108276609 gota04
108276609 gota04

தேரர்களுக்கு ஆங்கிலம், கணணி மற்றும் தொழில்நுட்ப அறிவு மேம்பாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிககை எடுத்துள்ளார்.

தேரர்களுக்கு ஆங்கிலம், கணணி மற்றும் தொழில்நுட்ப அறிவு மேம்பாடு உட்பட பிரிவினா ஆசிரியர்களின் நியமனங்கள் , சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் யோசனைகளையும் திட்டங்களையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளார்;.

இது குறித்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதற்கு சகல சமய ரீதியிலான பதிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ஒழுங்கு படுத்துவதற்கும் ராஜாங்க அமைச்சின் பூரண தலையீடு காணப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை கண்டறிந்து அதனை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பல்கலைக்கழகங்களுக்கும், தொழில்களுக்கும் இணைத்துக்கொள்ளும் போது அறநெறி சான்றிதழுக்கு முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.