கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்- மஹிந்த உறுதி

Mahida Rajapaksa
Mahida Rajapaksa

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்துவோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிக்கட்சி தலைவருமான மகிந்த ராஜபஷச தெரிவித்தார்.

கல்லடியில் நேற்று முன்தினம்(Oct.29) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எதிக்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

காணிகளுக்கு உரித்தான உரிமம் இல்லாது விவசாயம் மேற்கொண்டு வருகின்ற விவசாயிகளுக்கு காணி உரிமத்தை பெற்றுத்தருவோம் என உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவிக்கையில்

இந்த அரசாங்கம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒன்றுமே செய்யவில்லை. ஏனைய தலைவர்கள் அரசாங்கத்துக்கு செம்பு தூக்கி பந்தம் பிடித்து வருகின்றனர். அந்தவகையில் வியாழேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகி உள்ளதையிட்டு நாங்கள் சந்தோஷமடைகின்றோம்.

நாங்கள் யுத்தத்தை செய்து கொண்டே இந்த மாகாணத்தில் அபிவிருத்தியை செய்தோம். கல்லடி பாலம், மண்முனை பாலம், திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு பிரயாணிக்க 5 மணித்தியாலம் தேவைப்பட்டது. இப்பொழுது ஒன்றரை மணித்தியாலத்தில் சென்றுவிடலாம் கிண்ணியா பாலம் அமைத்தபடியால். இவ்வாறு பல அபிவிருத்திகளை செய்தோம்.

மட்டக்களப்பு மக்கள் இந்த தேசத்தில் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழவேண்டும் அதை நாம் செய்வோம் நாம் சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம் எனவே உங்கள் சின்னம் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவும் என அவர் தெரிவித்தார்.