வெடுக்குநாறி ஆலயத்துக்குச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை வீடியோ எடுத்து அச்சுறுத்திய பொலிஸ்!

IMG 6934
IMG 6934


வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பிரதேசத்திலுள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவுக்குச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கொடிகாமத்தில் மறித்து வீடியோ எடுத்து அச்சுறுத்தியுள்ளனர் பொலிஸார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பஸ்ஸில் நேற்று நெடுங்கேணி நோக்கிப் பயணமானார்கள்.

இடையில் கொடிகாமம் பகுதியில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பஸ்ஸை மறித்து மாணவர்களையும், அவர்கள் பொங்கல் நிகழ்வுகளுக்காகச் கொண்டு சென்ற பொருட்களையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்களைத் தொலைபேசியில் வீடியோ எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெடுக்குநாறி மலை செல்லும் வரையான வழியில் ஏழு இடங்களில் பொலிஸாரின் சோதனை இடம்பெற்றுள்ளது.

வெடுக்குநாறி ஆலய வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்னர் உடற்பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அவர்கள் உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.