வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரஷ்யப் பிரஜை

92594756 960x640 1
92594756 960x640 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானார் என்று கூறப்பட்ட ரஷ்யப் பிரஜைக்கான இறுதி பி.சி.ஆர்.சோதனை மூலம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது நிரூபனமானதையடுத்து அவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதனால் குறித்த நபர் ரஷ்யாவுக்கு மீண்டும் திரும்ப அனுமதிக்கப்படுவார் என்றும் சுகாதார அமைச்சின் தலைமை தோற்று நோயியல் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீர கூறினார்.

மேற்படி ரஷ்யப் பிரஜை கடந்த 13 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சொந்தமான விமானமொன்றில் நாட்டுக்கு வந்துள்ளார் என்பதோடு இவருடன் மேலும் 15 பேர் குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளனர். 

விமான நிலையத்தில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்படவில்லை. 

அதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது பரிசோதனை மேற்கொண்ட போதே தொற்றுக்குள்ளாகியுள்ளமை 23 ஆம் திகதி புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இறுதியாக மேற்கொண்ட பரிசோதனையின் போது தொற்று இல்லை என்ற பெறுபேறு கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.