மீள இங்கிலாந்துக்கு கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை அனுப்ப நடவடிக்கை!

108032759 37e9655e d3f0 4280 9565 57b58ca7c6f1
108032759 37e9655e d3f0 4280 9565 57b58ca7c6f1

2017 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை பயன்படுத்தி இங்கிலாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 263 கொள்கலன்களில் 21 ஐ மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 21 கொள்கலன்களும் கப்பலொன்றில் ஏற்றபட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கழிவுகள் அடங்கிய கொல்கலன்கள் கொண்டுவரப்பட்டன.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த கொள்கலன்களில் பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் காணப்பட்டமை முதற்கட்ட விசாரணையின்போது தெரியவந்தது.