சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

Sajith book
Sajith book

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனம் ” சஜித் சமூக புரட்சி” என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என சஜித் பிரேமதாசவினாள் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சஜித் பிரேமதாச இன்று முற்பகல் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதி ஒன்றை மல்வத்து பீடத்தின் மகாநாயக்கருக்கு கையளித்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவால் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இதன்போது தௌிவுபடுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.