விபத்தில் சிறுவன் படுகாயம்!

12 05 2019 accident logo 19217561 94313981
12 05 2019 accident logo 19217561 94313981

கொழும்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார் . நேற்று இரவு (27) சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த சிறுவன், வீதியை கடக்க முயன்ற போது அப்பகுதியில் வந்த காருடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்னேரியாவில் இருந்து பொலன்னறுவை நோக்கி சென்ற கார் மோதியதில் அச் சிறுவன் வீதியில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. காயங்களுக்கு உள்ளான சிறுவன் குறித்த காரிலேயே மின்னேரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

விபத்து குறித்து மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.