கல்முனையில் உலக நீர் வெறுப்பு தின விழிப்புணர்வு பேரணி

20200928 090847
20200928 090847

சுகாதார அமைச்சின் பொது சுகாதார மிருக வைத்திய சேவைகள் பிரிவின் ஆலோசனைக்கமைய
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் வழிகாட்டலில் கல்முனை
தொற்று நோய்ப் பிரிவின் ஏற்பாட்டில் தொற்று நோய் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப் தலைமையில் உலக நீர் வெறுப்பு தின விழிப்புணர்வுப் பேரணி இன்று (28) கல்முனை நகரில் இடம் பெற்றது.

கல்முனையில் உலக நீர் வெறுப்பு தின விழிப்புணர்வு பேரணி

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Montag, 28. September 2020

இதன் போது “எல்லா நாய்களுக்கும் நீர் வெறுப்புக்கு எதிராக தடுப்பூசிகளை வழங்குவோம்” எனும் தொனிப் பொருளில் நடை பெற்ற இவ்விழிப்புணர்வுப் பேரணியில் ஒத்துழைப்புடன் செயற்படுவோம், தடுப்பூசிகளை வழங்குவோம், நீர்வெறுப்பினை ஒழிப்போம் எனும் பதாகைகள் ஏந்தியவாறு நடைபெற்ற இப்பேரணியில் மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.