சுற்றுச்சூழல் தொடர்பாக வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை !

m 1
m 1

சுற்றுச்சூழல் அழிவு தொடர்பான சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி, பொதுமக்களை தவறாக வழி நடத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்க காலத்தில் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறும் புகைப்படங்களுடன் தவறான செய்திகளை வெளியிடுவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையின்படி, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து அரசாங்கம் ஒரு அமைதியான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தீங்கு குறித்த தவறான செய்திகள், குறிப்பாக சமூக ஊடக தளங்கள் வழியாகவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலமாகவும் பரவுவதாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது, அதே நேரத்தில் இதுபோன்ற தவறானசெய்திகள் அகற்றப்படும் என்றும் கூறியுள்ளது.

கூட்டங்கள், ஊடக விளக்கங்கள் மற்றும் நேர்காணல்களில் இதுபோன்ற தவறான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக எதிர்க்கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.