கோப்பாயில் நல்லிணக்க மத்திய நிலையம் திறந்து வைப்பு

vlcsnap 2020 09 29 13h31m52s046 2
vlcsnap 2020 09 29 13h31m52s046 2

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் “ஒன்றாக விழித்திருப்போம் என்னும் தொனிப்பொருளில் நல்லிணக்க மத்திய நிலையம் இன்று(29) கோப்பாயில் திறந்துவைக்கப்பட்டது.

தியாகி அறக்கொடை நிதிய இயக்குனர் தியாகலிங்கத்தின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நல்லிணக்க மத்திய நிலையம், ராணுவத்தின் 51வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்கவினால் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நல்லிணக்க மத்திய நிலையத்தில் சிங்கள மற்றும் ஆங்கில வகுப்புகள் வறிய மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. 2இன்றிலிருந்து குறித்த வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வில் தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகலிங்கம் ராணுவத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் 51வது படைப்பிரிவின் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

கோப்பாயில் நல்லிணக்க மத்திய நிலையம் திறந்து வைப்பு

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் “ஒன்றாக விழித்திருப்போம்" என்னும் தொனிப்பொருளில் நல்லிணக்க மத்திய நிலையம் கோப்பாயில் திறந்து வைப்பு

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Dienstag, 29. September 2020

குறித்த பின் கருத்து தெரிவித்த இராணுவத்தின் 51வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலனோம்பு திட்டங்களில் அடுத்த கட்டமாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத்பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வறிய மாணவர்களுக்கான சிங்கள மற்றும் ஆங்கில மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம் யாழ்ப்பாண குடாநாட்டின் சகல பிரதேசங்களிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அதன் முதற்கட்டமாக கோப்பாயில் தியாகி அறக்கொடை நிதியை பணிப்பாளரின் நிதியீட்டத்தின் கீழ் இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாண குடாநாட்டில் கோப்பாய் பிரதேசத்தில் வாழும் வறிய மாணவர்கள் தமது சிங்கள ஆங்கில கற்கை நெறிகளை இலவசமாக கற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு கற்றுக் கொண்டு அவர்கள் எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக நாட்டிற்கு சுபிட்சத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக முன்னேற முடியும் என்று தெரிவித்ததோடு இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக யாழ்குடா நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.