17 கட்சிகளின் ஒன்றிணைவு

slfp slpp 1
slfp slpp 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் ஒன்றிணைந்த ‘ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லுரியில் நேற்றைய தினம் (31) முற்பகல் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ உட்பட 17 கட்சிகளின் முக்கியஸ்தர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் உள்ளடங்கும் 17 கட்சிகளிளாவன

  1. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி
  2. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
  3. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
  4. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி
  5. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி
  6. தேசிய காங்கிரஸ்
  7. முற்போக்கு தமிழர் அமைப்பு
  8. மக்கள் ஐக்கிய முன்னணி
  9. ஜனநாயக இடதுசாரி முன்னணி
  10. ஸ்ரீலங்கா கமியூனிஸ்ட் கட்சி
  11. லங்கா சமசமாஜ கட்சி
  12. தேசிய சுதந்திர முன்னணி
  13. பிவித்துரு ஹெல உறுமய
  14. விஜயதரணி தேசிய சபை
  15. ஸ்ரீலங்கா மக்கள் கட்சி
  16. தேச விடுதலை மக்கள் கட்சி
  17. ஐக்கிய மக்கள் கட்சி