நாசாவின் அங்கீகாரத்தைப் பெற்ற 9 வயது இலங்கை மாணவன்!

பொலநறுவை – ஜயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த ஒஜித் துலங்ஞன் சில்வா, சிறுவயதிலேயே சர்வதேசம் வரை சென்று வெற்றி பெற்றமை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

நட்சத்திரங்கள் தொடர்பான ஆய்வாளராக வேண்டும் என்று கனவு காணும் 09 வயது சிறுவனே இவ்வாறு பிரபல்யம் அடைந்துள்ளார்.

ஒஜித் துலங்ஞன் சில்வா என்ற குறித்த சிறுவன் தோபாவெவ ஆரம்ப பாடசாலையில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த சிறுவன் இணையம் ஊடாக ஒன்லைன் மூலம் நாசா நிறுவனம் நடத்தும் பரீட்சைக்கு முகம் கொடுத்து இதுவரையில் 3 சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

ஒஜித் துலஞ்சன் தனது பெற்றோருக்கு ஒரே மகனாகும். தங்கள் மகன் அதிகாலை 2 மணிக்கு எழுந்து நட்சத்திரங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதாக ஒஜித்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.