இலங்கையில் 8 மாதங்களில் 4484 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் – அருட்சகோதரி சுபோஜினி

5
5

எமது நாட்டில் 2020 ஓகஸ்ட் மாதம் வரையான கடந்த எட்டு மாத காலப்பகுதி வரையில் 4484 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது . தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலில் கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் குறைவாக காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது . சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமானது இரண்டு விதமாக காணப்படுகின்றது.

ஒன்று தொடுகை மூலமாகவும் மற்றையது தொடுகை அற்றது என்பது இணைய மோசடி மூலமாக ஆபாசக்காட்சிகளை காண்பித்து பாலியல் புகைப்படங்களை சிறுவர்களுக்கு அனுப்பி காண்பித்து அதனூடாக சிறுவர்களை பயமுறுத்தி நல்லவர்களைாக நடித்து அவர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளுதல் பாலியல் சார்ந்த தகவல்களை அனுப்புவது பெற்றுக்கொள்வது இவ்வாறான துஷ்பிரயோகமானது சிறுவர்களை தற்கொலை வரையில் இட்டுச் செல்லக்கூடிய ஒரு தன்மையுடையதாக காணப்படுகின்றது . 

இன்றைய நிலையில் இணையதளம் மிகவும் அவசியமாகின்றது அறிவு ஆற்றல் விருத்திக்கு அது இலக்கு வைக்கப்பட வேண்டும் . என்பதை பெற்றோர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் அவதானிக்க வேண்டும். என்று இன்று சிறுவர் தினத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திசங்க வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிள்ளைகளின் ஒருங்கிணைந்த உருவாக்கத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு சிறுவர் பாதுகாப்பு எனும் தொனியில் விஷேட உரையாற்றிய வவுனியா திருக்குடும்ப கன்னியர் சபையின் அருட்சகோதரி சுபோஜினி செபஸ்தியாம்பிள்ளை இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தனது உரையில் ,

மிகவும் அதிர்ச்சியளிக்ககூடிய தகவல் என்னவென்றால் 90 வீதமான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களை ஏற்படுத்துகின்ற நபர்கள் உறவிகளுக்கு அறிமுகமானவர்கள் , சிறுவர்களின் சொந்தக் குடும்பங்களில் இருக்கக்கூடியவர்கள் . அதிகமாக இடம் பெறும் துஷ்பிரயோகங்கள் வீட்டுக்குள்ளேயே இடம் பெறுகின்றது 60 , 70 வீதமான துஷ்பியோகங்கள் சம்பவங்கள் அறிக்கையிடப்படுவதில்லை அல்லது வெளிப்படுத்தப்படுவதில்லை இதற்கான காரணங்களாக ஆண் பெண் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது அதிலும் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்

உலகத் தகவல்களைப் பார்கின்றபோது பத்தில் ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றார் . பாலியல் துஷ்பிரயேகம் செய்ய நினைப்பவர்கள் நான்கு கட்டங்களைத்தாண்டி செல்வார்கள் முதலாவது துஷ்பிரயோகம் செய்யவேண்டும் என்று ஒரு நோக்கம் காணப்படும் இரண்டாவது குற்ற உணர்வுகளை மேற்கொண்டு தங்களைத்தயார் படுத்துவதற்கு அந்தச் சிறுவர்களுக்கும் குடும்பத்திற்கும்  உதவி செய்வார்கள் துஷ்பிரயேகமற்ற சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவது என்பது சாத்தியமற்றது. 

ஆனால் மூன்றாவது கட்டங்களில் சமூகத்தடைகளைத்தாண்டுவதற்கு முயற்சிப்பார்கள் நாங்கள் அவதானமாக இருந்து எமது பிள்ளைகளை அவர்களுடன் தனியாக அனுப்புவதைத்தவிர்த்து பாதுகாக்கவேண்டும் . அவதானமாக இருக்கவேண்டும் சமூகத்திற்கு இது பற்றிய விழிப்புனர்வைக்கொடுக்கவேண்டும் . நான்காவது பிள்ளையின் மனதை வெல்வதற்கு முயற்சிப்பார்கள் பிள்ளைக்கு பரிசு வழங்கி குடும்பத்தினருடன் நல்லவிதமாக தாங்கள் பழகிக்கொள்வதாககக் காட்டிக்கொள்வார்கள் . 

இவ்வாறான நிலையில் பாடசாலையின் சிறப்பு நோக்கத்தில் எமது பிள்ளைகளுக்கு அறிவு திறன் மனப்பாங்கு இந்த மூன்று விடயங்களையும் பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் துஷ்பிரயோகத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்ற அறிவு எவ்வாறு தப்பித்துக்கொள்வது என்ற திறன் இதற்கு நான் உடன்படக்கூடாது என்ற மனநிலையை அறிவு திறன் மனப்பாங்கு என்ற மூன்றையும் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் . என்று மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.