இலங்கையில் பசுவதையைத் தடைசெய்து தெய்வீகப் பசுக்கள், இடபங்களைப் பாதுகாப்பதற்கு பூரண ஆதரவு நல்கும் நிகழ்வு!

20201001 154441
20201001 154441

இலங்கையில் பசுவதையைத் தடைசெய்து தெய்வீகப் பசுக்கள், இடபங்களைப் பாதுகாப்பதற்கு பூரண ஆதரவு நல்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நல்லூர் நல்லை திருஞானசம்பந்த ஆதின குருமூர்த்தி ஆலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு பண்டிதர் வ.பேரின்பநாயகம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கோபூசை, குருபீடாதிபதிகள் குருமார்களின் ஆசியுரை, வாழ்த்துரைகள் என்பவை இடம்பெற்றது.

இதன்போது கலந்துகொண்ட சைவ அமைப்புகளின் பிரிதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக மகஜர் ஒன்றினையும் தயாரித்து கையொப்பமிட்டிருந்தனர்.

பசுக்கள் இடபங்களைப் பாதுகாக்கும் சகல சமய நிறுவனங்களின் இணையம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,

மேற்படி நிகழ்வில், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் ஜெகதீஸ்வர குருக்கள், இலங்கை சைவ குருமார் ஒன்றிய தலைவர்
கிருபானந்த குருக்கள், ஸ்ரீ தேவி குருகுல சபரி பீட வேதாகம பாடசாலை அதிபர் சா.ஜெகதீஸ்வர சிவாச்சாரியார், தத்திரு வேலன் சுவாமிகள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் குருமார்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.