மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசகராக சமன் வீரசிங்க நியமனம்!

1575807305 dr saman 2
1575807305 dr saman 2

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசகராக வைத்தியர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

இவருக்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் அலரி மாளிகையில் நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு நியமனம் பெற்றுள்ள வைத்தியர் சமன் வீரசிங்க ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக பணியாற்றியுள்ளார்.

அத்துடன், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.