ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ARREST sattamani 1
ARREST sattamani 1

கொழும்பு – கெடிச்சவத்தை பகுதியில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் 97 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவிற்குபு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 25 வயதான சந்தேகத்திற்குரியவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு 12 பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.