தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வை பெறவேண்டும்-தினேஷ் குணவர்த்தன

88u
88u

அரசையும், சிங்கள மக்களையும் சீற்றமடைய செய்யும் வகையிலேயே தமிழர்கள் நடக்கிறார்கள். அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து, அரசியலமைப்பை மதித்து நேர்வழியில் நடந்தால் அவர்களிற்கான அரசியல் தீர்வு தானாகவே கிடைக்கும். ஆனால் அந்த தீர்வு ஒற்றையாட்சி தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வை கேட்க வேண்டி வரும் என சபை முதல்வரும், வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியலமைப்பை மதித்து, அரசை மதித்து தமிழர்கள் நேர்வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்திருக்க வேண்டியும் வந்திருக்காது.

படையினரின் தியாகத்தினால் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலைமையை ஏற்படுத்தினோம். ஆனால் அவர்கள் திரும்பவும் பழைய நிலைமைக்கே செல்ல முற்படுகிறார்கள்.

ஆயுதப் போராட்டகாலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதி கேட்டு வடக்கு கிழக்கில் தமிழர்கள் கதவடைப்பு மேற்கொண்டுள்ளனர். போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள். எனவும் குறிப்பிட்டுள்ளார்இ