மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையம் திறப்பு

1601773868 morison 2
1601773868 morison 2

ஹோமாகம, பிடிபன ஸ்லின்டெக் (SLINTEC) வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (02) கலந்து கொண்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக 13.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆண்டுதோறும் 1.8 பில்லியன் மருந்து மாத்திரைகள் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், இந்த உற்பத்தி நிலையத்தின் ஊடாக எதிர்காலத்தில் உள்ளூர் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய உள்நாட்டு ஒளடத உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்படும் இந்நிலையத்தின் ஊடாக எதிர்காலத்தில் வெளிநாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் ஒளடத உற்பத்தி இடம்பெறவுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, விமல் வீரவங்ச, காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, ஹேமாஸ் குழுமத்தின் தலைவர் ஹுசேன் யூஷுக் அலி, மொறிசன் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முரகாசா யூஷுக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.