அட்டாளைச்சேனையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வு

vlcsnap 2020 10 04 08h51m43s920
vlcsnap 2020 10 04 08h51m43s920

சமய, சமூகங்களுக்கிடையிலான கடும் போக்குவாதம் மற்றும் தீவிரவாத சிந்தனைகளை களைந்து பண்மைத்துவ சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு நாள் செயலமர்வொன்று அம்பாறை அக்கரைப்பற்றில் நேற்று (03)ஆம் திகதி நடைபெற்றது.

அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில் மற்றும் தீகவாபி ஆகிய பிரதேசங்களின் மூவினங்களையும் சேர்ந்த பிரதேச மட்ட சகவாழ்வுக்கான இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இச்செயலமர்வு நீதிக்கானதும், சமாதானத்துக்குமான சர்வதேச அமைப்பின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது.

நீதிக்கானதும், சமாதானத்துக்குமான சர்வதேச அமைப்பின் இணைப்பாளர் எம்.ஏ.எம். சஜீர் தலைமையில் நடைபெற்ற இந்நகழ்வில் பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் வை.றாசீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பிரதம வளவாளராக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எம்.பஹீஜ் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கலாசார இணைப்பாளர் ஏ.எல்.தௌபீக், பொத்துவில் பிரதேச கலாசார உத்தியோகத்தரும் றுகுணு லங்கா அமைப்பின் தலைவருமான எம்.எஸ்.ஜவ்பர் மற்றும் அட்டாளைச்சேனை சர்வமத குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், சமயங்கள், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள், கசப்புணர்வுகள், வேற்றுமைகள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனைகள், கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.