உடல் ஆரோக்கியத்திற்காக கிளிநொச்சியில் நடை பவனி!

IMG 6086 1
IMG 6086 1

கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IMG 6006
IMG 6006

ஏற்பாட்டில் உடல் ஆரோக்கியம் மற்றும்  சமூக வழிப்புணர்வுக்குமான  நடைபவனியானது, கிளிநொச்சி இந்துக் கல்லூரி தொடக்கம் கிளிநொச்சி மத்திய கல்லூரி வரை 9.2 கிலோ மீற்றர் தூரத்திற்கு இடம்பெற்றது. 

இன்று காலை 6.45 மணிக்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரி முன்றலில் ஆரம்பமான நடையானது 8.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நிறைவுப்பெற்றது.

IMG 6014
IMG 6014

முக்கியமாக மாணவர்கள் இளம் தலைமுறையினர்  உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து  மட்டங்களிலும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள போதை பொருள் பாவணைக்கு எதிரான விழிப்புணர்வு, வீதி விபத்துக்களை தடுத்தல், சுத்தமான சூழலை பேணுதல் போன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கிய சமூத்தை உருவாக்கும்  நோக்கில் இவ் விழிப்புணர்வு நடை இடம்பெற்றது. 

இதேவேளை இவ்  விழிப்புணர்வு நடைபவனியானது அடுத்த வாரம் கிளிநொச்சி இராமநாதபுரம் பாடசாலையில் ஆரம்பித்து வட்டக்கச்சி மத்திய கல்லூரி வரை இடம்பெறவுள்ளது.

IMG 6086
IMG 6086

இன்றையதினம் இடம்பெற்ற  இவ் விழிப்புணர்வு நடைபவனியில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதிறூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்லைகழக கிளிநொச்சி வளாகங்களான தொழிநுட்ப பீடாதிபதி திருமதி சிவமதி, விவசாய பீட பீடாதிபதி   சூரியகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி.கமலராஜன், யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளாரும் கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் இணைப்பாளருமான மருத்துவர். த. சத்தியமூர்த்தி,  மற்றும் வைத்தியர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.