பரீட்சைகள் பிற்போடுவது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை இல்லை-சனத்பூஜித

d8378f87598628aa1b870a1075f42b6c XL 620x330 1
d8378f87598628aa1b870a1075f42b6c XL 620x330 1

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றைப் பிற்போடுவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைச்சை நாடியுள்ளோம்.” என பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை விடுமுறைக்காகப் பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்பட்டுள்ளன. எனினும், திட்டமிட்டபடி சகல பரீட்சைகளும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. 2 ஆயிரத்து 936 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் தோற்றவுள்ளனர்.

அதேவேளை, ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சைகள் 2 ஆயிரத்து 648 நிலையங்களில் இடம்பெறவுள்ளது. 2 இலட்சத்து 77 ஆயிரத்து பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 85 ஆயிரத்து 244 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.