கொரோனா தொற்றின் தற்போதைய நிலமை தொடர்பில் விளக்கும் இராணுவ தளபதி!

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவிற்கு மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இப்பகுதிகளுக்கு கடந்த 7 நாட்களுக்குள் வருகை தந்த பலர் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழியர்களை சந்திப்பதற்காக இலங்கையின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளதாகவும்; அதனால் இவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரையில் எவ்வாறான நிலமை என கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியவசிய தேவையின்றி வௌியே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அவர்; எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் நாங்கள் இதனை இனங்கண்டு கொள்ளும் வரையில் யாரேனும் இப்பகுதிகளுக்கு வருகை தந்திருந்தால் அதனை மறைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.