வவுனியாவில் இடம்பெற்ற ‘இளைஞர்களும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல்!

“அப்ரியல்” நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் மற்றும் சுதந்திரமானதும் நியாயமான தேர்தலுக்கான இளைய தலைமுறைக்கான செயற்பாடுகள் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று காலை வவுனியா தவசிகுளத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக தேசிய தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கலந்துகொண்டதுடன் , தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், முன்னாள் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.முகமட், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணான்டோ மற்றும் வன்னி மாவட்டங்களை சேர்ந்த உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள், இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டங்கள், கண்காணிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக திறந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதுடன், இளைஞர்களின் கேள்விகளிற்கும், சந்தேகங்களிற்கும் தேர்தல் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளால் பதில்கள் வழங்கப்பட்டிருந்தது.