ஆவா குழு வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்!

51873c98 96b4 469f 96a7 2f7af522ea09
51873c98 96b4 469f 96a7 2f7af522ea09

ஆவா குழு வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீ வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டுத் தப்பித்துள்ளது.

இணுவில் துரை வீதியில்  உள்ள வீட்டிலேயே இன்று (06) பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பெருமாள் கோவிலடியில் மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞனை வாளால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஆவா வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் வரும் 9ஆம் திகதி வரை விளக்கமற்றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே ஆவா வினோதனின் வீட்டில் வன்முறைக் கும்பல் ஒன்றால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

5c36e51e 1917 433b ab60 143bbc61dbd6
1ae25be8 565f 44d8 a832 7bcbbff31fac