வவுனியாவில் நேற்று 56.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

வவுனியாவில் நேற்று காலை முதல் இன்று காலை வரையான கடந்த 24 மணி நேரத்திற்குள் 56.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வழிமண்டலவியல் அவதானிப்பு நிலையப் பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார் .

இது கடந்த வருடத்தில் குறிப்பிட்ட மழை வீழ்ச்சியை விடவும் குறைவான மழை வீழ்ச்சியை இம்மாதம் எதிர்பார்க்கின்றார்கள் . இன்று மாலை சாதாரண மழை பெய்யக்கூடும். இடி மின்னல் தாக்கம் குறைவாக காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .

வவுனியாவில் நீண்ட நாட்களின் பின்னர் நேற்று மழை பெய்துள்ளது. பல நாட்களாக வரட்சியான கால நிலை காரணமாக விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஆர்வமற்ற நிலையில் காணப்பட்டபேதும் நேற்று மாலை பெய்த கடும் மழையை அடுத்து தமது நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.