குலசிங்கவின் தொழில்நுட்ப பூங்காவை ஜனாதிபதி திறந்து வைப்பு

technology
technology

இலங்கையின் புகழ்பெற்ற பொறியியலாளரான ஏ.என்.எஸ்.குலசிங்கவின் நூறாவது ஜனன தினத்தை முன்னிட்டு பொறியியல் ஆலோசனை மத்திய பணியகம் மற்றும் பொறியியல் சேவைகள் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் விஞ்ஞான அறிவினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கோள் மண்டல வளாகத்தில் நிர்மாணித்துள்ள தொழில்நுட்ப பூங்காவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (Nov.04) முற்பகல் திறந்துவைத்தார்.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து பூங்காவை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமது தொழிநுட்ப அறிவினூடாக பல்வேறு வெற்றிகளை பெற்ற எமது நாட்டின் பொறியியலாளரான ஏ.என்.எஸ்.குலசிங்க, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அமைப்பாளரும் அதன் முதலாவது தலைவருமாவார்.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.