சுகாதார விதிமுறைகளை மீறிய 124 நபர்கள் கைது

Part DEL Del6389089 1 1 0
Part DEL Del6389089 1 1 0

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படும் இந் நேரத்தில் சுகாதார ஒழுங்கு விதிமுறைகளை மீறிய 124 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் வேலைசெய்த பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் நாட்டில் வைரஸ் தாக்கம் அதிகரித்ததின் விளைவாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அவற்றோடு கொரோனா தொற்று அதிகரித்துள்ள மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியது.

மேலும் வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணிவரை மாத்திரம் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதோடு குறித்த கைது நடவடிக்கையில் 34 வாகனகளும் கைப்பற்ற பட்டமை குறிப்பிடத்தக்கது.