கொழும்பிலுள்ள அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள்!

1600661982covid test
1600661982covid test

கொழும்பிலுள்ள அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெகசின், விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை தலைமையகத்தின் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.