ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளருக்காக 360 ரூபாய் செலவு

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளருக்காகவும் அரசாங்கம் 360.00 ரூபாவை செலவு செய்வதாக தேர்தல் வன்முறைகள் குறித்து கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய அமைப்பாளர் மஞ்ஜுல கஜநாயக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக 550 கோடி ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த செலவின் அடிப்படையில் ஒரு வாக்காளரின் செலவு கணிப்பிடப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு தேர்தல்கள் திணைக்களம் 712 மில்லியன் ரூபாவை செலவிட்டு அத்தேர்தலில் வாக்களிக்கும் ஒரு வேட்பாளருக்கு 54.00 ரூபாவை செலவிட்டிருந்தது.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 1825 மில்லியன் ரூபாவை செலவு செய்து ஒரு வாக்காளருக்கு அத்தேர்தலில் 132.00 ரூபாவை அரசாங்கம் செலவு செய்திருந்தது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல்கள் திணைக்களம் 2705 மில்லியன் ரூபாவை செலவு செய்ததன் மூலம் ஒரு வாக்காளருக்கு 180.00 ரூபாவை செலவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.