வட்டவளை கரோலினா பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் சேதம்!

699
699

வட்டவளை காவல் துறை பிரிவுக்குட்பட்ட வட்டவளை கரோலினா பகுதியில் கித்துல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இச் சம்பவம் இடம்பெறும் போது ஒரு வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்தாகவும் எனினும் தெய்வதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் மற்றைய வீட்டில் எவரும் இருக்கவில்லை என்றும் காவல் துறையினர் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

69

சம்பவத்தில் இரு வீட்டிலும் உள்ள பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி பாதை போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொது மக்கள் இணைந்து வீதியில் கொட்டிக் கிடக்கும் மண்ணை அகற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.